வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் விழா.. அமைச்சர்கள் இத்தாலி பயணம்

author img

By

Published : May 13, 2022, 11:43 AM IST

Updated : May 13, 2022, 1:01 PM IST

tamil-nadu-ministers-travel-to-italy-to-attend-canonization-ceremony-for-devasahayam-pillai வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கும் விழா..

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வரும் 15ஆம் தேதி மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே இது முதல் முறையாகும்.

சென்னை: தேவசகாயம் பிள்ளை இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். வாசுதேவன்-தேவகியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும்.

மறைசாட்சியாக தேவசகாயம்: கடந்த 1745ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி கிறிஸ்தவ சமயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். 1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கிறிஸ்தவ மத நம்பிக்கைகாக தன் இன்னுயிரை தியாகம் செய்தார். இதன் காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக தேவசகாயம் அறிவிக்கப்பட்டார்.

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை மற்றும் கன்னியாகுமரி கோட்டார் மறை மாவட்டம் மற்றும் இறை மக்கள் சார்பாக தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கக்கோரி வாடிகனில் செயல்பட்டு வரும் புனிதர் பட்டமளிப்பு பேராயத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

முக்திப்பேறு பெற்றவராக: அதன் முதல் நிகழ்வாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள கார்மல் பள்ளியில் நடைபெற்ற முக்திப்பேறு அளிக்கும் விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ பங்கேற்று முக்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்
வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்

செயின்ட் பீட்டர் சதுக்கம்: இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம் என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக, வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது.

தேவசகாயத்துக்கு வாடிகனில் நடைபெறும் விழா: கரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி தேவசகாயத்துக்கு வாடிகனில் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என (நவ.10) அறிவிப்புச் செய்யப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கும் விழா
வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கும் விழா

தமிழ்நாடு அரசின் பிரதிநிதி: இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து இத்தாலி புறப்பட்டனர்.

வரலாற்றில் முதல் முறையாக தமிழருக்கு புனிதர் பட்டம்.. கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் விழா.. அமைச்சர்கள் இத்தாலி பயணம்

தமிழ்நாடு மக்களின் நல்லெண்ணத்தை: அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த புனித தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி நாட்டில் புனிதர் பட்டம் வழங்க உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதால் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ்,சிறுபான்மை ஆணைய தலைவராக நானும் செல்கிறோம்.

இதன் மூலமாக தமிழ்நாடு கிறிஸ்தவ மக்களுக்குத் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாடு மக்களின் நல்லெண்ணத்தை எடுத்துச் சென்று அங்கு இருக்கின்ற கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கப் பிரதிநிதியாகச் செல்கிறோம்" என்றார்.

சமத்துவத்தை உருவாக்குகின்ற நிலை: அதன் பின் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் முதல் துவக்கத்தின் நிலைபாடில்தான் அனைவருக்கும் அனைத்து சமத்துவத்தையும் உருவாக்குகின்ற நிலையில் கத்தோலிக்க மார்க தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க உள்ளோம். இந்த பயணத்தைப் புனித பயணமாக தற்போது மேற்கொண்டு உள்ளோம்" என்றார்.

கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கும் விழா
கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கும் விழா

கன்னியாகுமரி மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி: அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து மிக சிறந்த மனிதர். சமூகத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குமரி மாவட்ட மக்களிடமும் கிறிஸ்துவ மக்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி நாங்கள் குழுவாக செல்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு சிறப்பான நிகழ்வு அங்கு செல்வதை ஒரு பெரிய அரிய வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து சமூக சீர்திருத்தத் இதற்காகப் பாடுபட்டு உயிர் நீத்தவருக்குப் புனிதர் பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி" என கூறினார்.

இதையும் படிங்க: மரியம் திரேசியாவிற்கு புனிதர் பட்டம் - போப் ஆண்டவர் அறிவிப்பு

Last Updated :May 13, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.