ETV Bharat / state

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உறுதிச்சான்று கட்டாயமில்லை - பள்ளிக்கல்வித்துறை

author img

By

Published : Dec 21, 2022, 4:42 PM IST

பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான பட்டியலில் பெயரை சேர்க்க பள்ளிகளில் மாணவர்களிடம் bonafide certificate (உறுதிச்சான்று) கேட்கப்பட்ட நிலையில், தற்பொழுது அதனை தர வேண்டியது கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உறுதி சான்று தரவேண்டிய கட்டாயமில்லை
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உறுதி சான்று தரவேண்டிய கட்டாயமில்லை

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்பதற்கு, மாணவர் முந்தைய ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்தாரா அல்லது ஆங்கில வழியில் படித்தாரா? எந்த பள்ளியில் மாணவர் படித்தார் என்கிற விவரங்களை ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து உறுதி சான்றிதழ் (bonafide certificate) பெற்றுத் தர வேண்டும் என சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டனர்.

இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேர்ந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் மாணவரின் பெயர் இடம் பெற செய்ய Bonafide certificate தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்ததற்கான தகவல்களை பெறுவதற்கும், இடை நிற்றலை குறைப்பாதற்கான உதவித்தொகை வழங்கவும், புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளின் விபரத்தை உடனே அளிப்பதற்காகவும் ,தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்குவற்கு தேவையான தகவல்களை பெறுவதற்காகவே இந்த விபரங்கள் கேட்கப்பட்டதாகவும், தற்பொழுது தேர்வு நெருங்குவதால் பொதுத்தேர்வு எழுதும் ,மாணவர்களிடம் உறுதிச் சான்று பெறமால் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்ச்செம்மல் விருதுகள், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள்: 48 பேருக்கு வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.