ETV Bharat / state

வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Mar 6, 2022, 3:20 PM IST

Updated : Mar 6, 2022, 4:52 PM IST

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும்
தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும்

தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றார். மார்ச் 6ஆம் தேதியான இன்று இந்நாளை நினைவுகூரும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், 'தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று!

  • தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று!

    எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்! https://t.co/E5G6fu9msv

    — M.K.Stalin (@mkstalin) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

  • இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்!

    — M.K.Stalin (@mkstalin) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்!' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க புதிய குழு

Last Updated :Mar 6, 2022, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.