ETV Bharat / state

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி!

author img

By

Published : Jan 13, 2020, 4:03 PM IST

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர்
ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர்

சென்னை: தேர்தலில் வெற்றி பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கொங்கு நாடு கட்சி சார்பாக வெற்றிபெற்றவர்களின் பட்டியலை ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், ‘உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக 500க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளோம். இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றோம்’ எனத் தெரிவித்தார்.

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர்

மேலும், திமுக கூட்டணியில் எந்த உரசலும் கிடையாது என தெரிவித்த அவர், ‘உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஆங்காங்கே பிரச்னை இருக்கதான் செய்யும். இதை காங்கிரஸ் கட்சி பெரிது படுத்தியிருக்க அவசியம் இல்லை’ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர், கட்சியில் எல்லா பொறுப்பாளர்களையும் அழைத்து எந்த அளவு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்று கேட்கவேண்டும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டணியில் கவுன்சிலர் பதவி கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்ட்டது. திமுக சார்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கை சின்னத்தில் கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை போட்டியிடச்செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவரிடம் பேச தொலைபேசியில் அழைத்திருந்தும் அவர் திருப்பி அழைக்கவில்லை. அங்கு போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார், காரணம் கூட்டணிக்குள் குழப்பம் உள்ளது என்று பொதுவான வாக்காளர்கள் வாக்கு அளிக்கவில்லை. இது போன்ற பிரச்னைகளால் பத்து இடங்களில் நாங்கள் தோற்றுள்ளோம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி போல் எல்லா கட்சிகளிளும் பிரச்னை உள்ளது. இதை காங்கிரஸ் பெரிது படுத்தியிருக்கக் கூடாது. மேலும் பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தலை தாமதப்படுத்தாமல் மாநில அரசு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி!

Intro:


Body:Visuals


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.