ETV Bharat / state

தனித் தேர்வர்கள் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jan 1, 2020, 11:06 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பிற்கான அறிவியல் செய்முறை பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜனவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

SSLC PRACTICAL EXAMINATION APPLICATION DATE
தனித் தேர்வர்கள் செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பிற்கு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வில் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவுக்கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டை சேவை மையங்களின் மூலம் ஜனவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அறிவியல் பாடம், கருத்தியல் உள்ளிட்ட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், 2012ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணாவர்கள் பழைய பாடத்திட்டத்தில் (2019 ல் இருந்த பாடத்திட்டம்) கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வினை எழுதலாம். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேரம் நீடிப்பு

Intro:10 ம் வகுப்பு அறிவியல் செய்முறை
தனித் தேர்வர்கள் விண்ணப்பம் Body:
10 ம் வகுப்பு அறிவியல் செய்முறை
தனித் தேர்வர்கள் விண்ணப்பம்

சென்னை,

பத்தாம் வகுப்பு மார்ச் 2020 பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்களும் ஜனவரி 6 ந் தேதி முதல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 ம் வகுப்பு மார்ச் 2020 பொதுத் தேர்வில் அறிவியல் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவுக்கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும்
பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்ள வேண்டும்.

மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன்,
மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான
விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று 10 ம் வகுப்பு மார்ச் 2020
பொதுத்தேர்விற்கு ஜனவரி 6 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை அறிவியல் பாடம் கருத்தியல்
உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
மேலும் 2012 ம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற
மாணாவர்கள் பழைய பாடத்திட்டத்தில் (2019 ல் இருந்த பாடத்திட்டம்)
அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வெழுத வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.