ETV Bharat / state

போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் தேவை: வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 10:52 PM IST

போக்சோ சட்டம் குறித்து மனம் திறக்கும் வழக்கறிஞர்கள்
போக்சோ சட்டம் குறித்து மனம் திறக்கும் வழக்கறிஞர்கள்

குழந்தைகளுக்காக இயக்கப்பட்ட போக்சோ சட்டத்தின் அடிப்படை நோக்கம் குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சென்னை: அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டமே போக்சோ சட்டம். இந்த சட்டத்தை எவ்வாறு எந்த வகையில் அனுகுவதென்று இன்று வரையிலும் காவலர்கள் சிலருக்கு போதிய விழிப்புணர்வுகள் இல்லை. பின்பு போக்சோ சட்டம் பற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்க மனம் ஆழ்த்துகிறது. எடுத்துச் சொல்லுபவர்களுக்கே அதைப்பற்றிய விவரங்கள் தெளிவு படாதா வேலையில், சாமனிய மக்களின் தெளிவு எந்நிலையில் இருக்கும் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இப்படியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், போக்சோ சட்டம் குறித்து சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கத்தை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இலக்காகும் குழந்தைகள்: சட்டரீதியாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் கூட, ஏதும் அறியாத குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம், குழந்தைகள் உடல்ரீதியாக பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானாலும், அவர்கள் அதை எப்படி வெளியில் தெரியப்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வுகள் இல்லை.

ஒருவர் தவறான நோக்கத்தில் தொடுவதை கூட தவறு என உணர முடியாமல் குழந்தைகள் இருப்பதால், சிலரின் எளிதான இலக்காக குழந்தைகளே முதலிடத்தில் இருக்கின்றனர். மேலும், இந்தியாவில் அதிகமாக பாலியல் சீண்டல்களுக்கு பெண் குழந்தைகளே பாதிக்கப்படுவதாக தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போக்சோவின் அறிமுகம்: தொடரும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் 2012 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் The Protections Of Childrens from Sexual Offences act 2012 என்று அழைக்கப்படுகிறது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் தொல்லைகள் மற்றும் வன்கொடுமைகளை முழுமையாக நீக்கி பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும்.

சட்டம் சொல்லும் தண்டனை:

  • போக்சோ சட்டம் 3 மற்றும் 4ன் கீழ், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சமாக 7 ஆண்டுகளும், குற்றத்தின் தன்மையை நீதிமன்றம் தீவிரமாக கருதினால் ஆயுள் தண்டனையும் வழங்கலாம்.
  • சட்டம் 5 மற்றும் 6ன் படி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது பெற்றோர், பொறுப்பாளர், ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கும்.
  • சட்டம் 7 மற்றும் 8ன் படி குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது போன்ற குற்றங்களுக்கு குறைந்த பட்சமாக 3 ஆண்டுகளும், அதிகபட்சமாக 8 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.
  • சட்டப்பிரிவு 9 மற்றும் 10ன் படி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் பெற்றோர், பொறுப்பாளர், ஆசிரியர் மற்றும் காவலராக இருந்தால் குறைந்த பட்சமாக 5 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.
  • சட்டப்பிரிவு 11 மற்றும் 12ன் படி சைகை மூலமாக பாலியல் தொல்லை அளிப்பது, ஆபாசமாக பேசுவது, பாலியல் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவது, தொலைபேசியில் அழைப்பது ஆகிய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.
  • சட்டம் 13 மற்றும் 14ன் படி குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பது, அதை விற்பது, இணையதளங்களில் வெளியிடும் குற்றத்திற்கு குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளும் தண்டனை கிடைக்கும்.

கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் அதிகமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இங்கே மாற வேண்டியது மனிதர்களா? இல்லை சட்டங்களா? சட்ட வல்லுநர்கள் தரும் விளக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் அருள்மொழி கூறுகையில், "இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் போல குழந்தைகளின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட போக்சோ சட்டமும் சிறப்பாக செயல்படுகிறது. போக்சோ என்றால் என்ன என காவல்துறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இருந்தும், பெரும்பாலான காவல்துறையினர், மைனர் திருமணங்களுக்கு மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தவறான புரிதலில் இருக்கின்றனர். அதனால் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படாமல் குறைகின்றன.

இன்றைய சமுதாயத்தில் ஆண்களுக்கு பாலியல் தொடர்பான தவறான புரிதல் அதிகமாக இருக்கிறது. பெண்களை எப்படி பார்க்க வேண்டும்? எது ஆபாசம் என்பதை விளக்கவோ? எடுத்துக்கூறவோ பெற்றோர்கள் முன்வருவதில்லை. மேலும் இதற்கான சரியான முறை என்றால் கல்வியா என்று கேட்டால்..? இல்லை. பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பதற்க்கு சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. திரைப்படங்களில் வரும் அரை நிர்வாண காட்சிகளும் மனித மிருகங்களை தவறு செய்ய தூண்டுகிறது.

மலைவாழ் மக்கள் தங்கள் சமுதாய பழக்க வழக்கங்களால் சிறு வயதில் மனம் விரும்பி திருமணம் செய்து கொண்டாலும், அது தண்டனைக்கு உரிய குற்றமே. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எனத் தெரிந்தால் இன்றைய நீதிமன்றங்கள் கடுமையான தண்டனை வழங்குகின்றன" என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை நீதிமன்றத்தின் மற்றொரு வழக்கறிஞர் ஆதிலெட்சுமி கூறுகையில், "குழந்தைகளின் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் சிறப்பாக செயல்படுகிறது. போக்சோ சட்டத்தின் மிகப்பெரிய பின்னடைவாக, மனம் ஒன்றி தவறு செய்யும். ஆண், பெண் இரு மைனர்களில் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், ஆண்களை குற்றவாளிகளாகவும் சட்டம் சித்தரிக்கிறது. பெண் மைனரின் கல்வி மற்றும் பாதுகாப்பை குற்றவியில் நடைமுறை சட்டம் 164ன் படி, நடுவர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சட்டம் அனுமதிக்கிறது.

ஆனால் மாநில அரசின் அரசாணை வீடியோ பதிவு செய்வதை தடை செய்கிறது. பள்ளி, கல்லூரி, மற்றும் வேலை செய்யும் இடங்களில் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதில் நல்ல, பத்திரிக்கைளின் பங்களிப்பும் மிக முக்கியமானது என நம்பிக்கை தெரிவித்தார். சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே குழந்தைகளின் மீதான குற்றங்களை தடுக்க முடியும் எனபதே நிதர்சனமான உண்மை" என தன் கருத்தை ஆழமாக பதிவு செய்தார்.

இதையும் படிங்க: B.E., B.Tech 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவு; 208 கல்லூரிகளில் 10% மாணவர்கள் சேரவில்லை.. வேகமாக நிரம்பும் துறைகள் எவை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.