ETV Bharat / state

Train Timing Changes : ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தெற்கு ரயில்வே கொடுத்த அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 7:57 AM IST

southern-railway-has-increased-the-speed-of-34-trains
indian railways; 34 ரயில்களிலின் வேகத்தை அதிகரித்துள்ளது தெற்கு ரயில்வே!

Train Timing Changes in Southern Railway : அக்டோபர் 1ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வேயில் உள்ள 34 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: இந்திய தெற்கு ரயில்வேக்குள் இயக்கப்படும் விரைவு, அதிவிரைவு ரயில்களின் சேவைகள் இன்று (அக். 1) முதல் மாற்றப்படுகின்றன. இதன்படி விரைவு மற்றும் மெயில் ரயில்களில் நேர மாற்றமும், வேகம் மற்றும் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட ரயில்களில் செய்யப்பட்டிருக்கும் நேர மாற்றம் குறித்து இங்கு பார்ப்போம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் உள்பட 11 விரைவு ரயில்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. திருச்செந்தூர் விரைவு ரயில், தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 199 ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களில் தற்காலிகமாக நின்று செல்கிறது. மேலும், புனே - கன்னியாகுமரி உள்ளிட்ட 34 ரயில்கள் வேகமாக இயக்கப்பட உள்ளன.

  • மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு வந்த வைகை விரைவு ரயில், இன்று முதல் பழைய நேரத்திற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வரும் வைகை விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • அதேபோல் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் ரயில் இன்று (அக். 1) முதல் இரவு 9.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.20 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என கூறப்பட்டு உள்ளது.
  • அதேபோல் சென்னை - திருநெல்வேலி இடையே கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மதுரைக்கு காலை 7.50 மணிக்கு வருகிறது. இந்த நேரத்தை சரிசெய்யும் வகையில் மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பணிமாறுதல் பெற்ற தஞ்சை மாநகராட்சி ஆணையர்.. கண்ணீர் தழுவல் உடன் பிரியாவிடை அளித்த உறுப்பினர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.