ETV Bharat / state

சென்னை- நெல்லை இடையே 'கரீப் ரத்' சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 7:25 PM IST

தீபாவளியை முன்னிட்டு சென்னை- நெல்லை இடைய "கரீப் ரத்" வாராந்திர சிறப்பு ரயில் சேவை
தீபாவளியை முன்னிட்டு சென்னை- நெல்லை இடைய "கரீப் ரத்" வாராந்திர சிறப்பு ரயில் சேவை

Southern railway: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- திருநெல்வேலி இடையே வாராந்திர 'கரீப் ரத்' சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே இன்று(நவ.3) தெரிவித்துள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இதற்காக, வழக்கமாக இயங்கும் ரயில்களை விட பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக இம்மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் திருநெல்வேலி இடைய மூன்று சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - நெல்லை இடையே மற்றும் மறுமார்கமாக நெல்லை- சென்னை இடைய "கரீப் ரத்" என்ற வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னை - நெல்லை இடையே நவ.8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை மட்டும் ) வாராந்திர சிறப்பு ரயில் (06051) இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும்.

இதேப்பொல் மறுமார்கமாக நவ.9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) நெல்லையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06052) அதிகாலை 3.45 மணியளவில் சென்னை வந்தடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, "இதில் 14- மூன்றாம் வகுப்பு ஏ.சி வகுப்புகள் மற்றும் இரண்டு லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாகும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூர் வழியாகத் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வழியாகத் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணியளவில் சென்றடையும். மேலும் இதன் மறுமார்கமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணியளவில் சென்னை சென்டரல் வந்தடையும். தற்போது இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது" என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வானில் வட்டமடித்த 5 விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.