ETV Bharat / state

TNPSC: டிஜிபி ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா சைலேந்திர பாபு?

author img

By

Published : Apr 20, 2023, 2:36 PM IST

TNPSC
டின்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கிருஷ்ணகுமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனிடையே டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் இல்லாமல் தள்ளாடி வருகிறது. மேலும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய ஆணையத்தில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை அரசு நிரப்பாமல் உள்ளதால் பெரும்பான்மை இல்லாமலும், முடிவு எடுக்க முடியாமலும் அரசு தினறி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைக்கான பணியாளர்களை தேர்வு செய்து நேரடியாக நியமனம் செய்யும் முக்கியமான பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்கான தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 4 உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில், மீதம் இருக்கும் 3 உறுப்பினர்களில் கிருஷ்ணகுமார் இன்று ஓய்வு பெறுகிறார்.

இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தலைவர் பணியிடமும் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 4 உறுப்பினர்களில், உறுப்பினர் முனியநாதன் தற்காலிக தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

மீதம் உள்ள 3 உறுப்பினர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், உறுப்பினர் கிருஷ்ணகுமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. டிஎன் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர் பணியிடங்களையும் நிரப்பாவிட்டால், தேர்வாணையத்தின் பணிகள் வரக்கூடிய நாட்களில் முடங்கும் நிலை ஏற்படும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் காவல்துறைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் சைலேந்திரபாபு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காகவே தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதாகவும் சில தகவல்கள் கூறப்படுகிறது. மேலும் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரியும் போலீசாருக்கு நீர்மோர், ஜூஸ் வழங்கிய எஸ்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.