ETV Bharat / state

சித்தா ஆயுர்வேதாவிற்கு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Aug 27, 2019, 2:49 AM IST

student admission

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

  • பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகள், சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2019-20ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்வதற்கு வரும் 28ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு அரசு, சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2019-20ஆம் ஆண்டிற்கு மருத்துவ பட்டப்படிப்புகளில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் அல்லது அதற்கு நிகரான அறிவியல் பாடங்களின் தேர்வில், 2019 மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்-2019 ) எழுதி, தேர்ச்சி பெற்று உரிய தகுதி மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
  • படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு பொது மற்றும் சிறப்பு விண்ணப்பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி, அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு www.tn.health.org என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம்.
  • விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பை 28-8-2019 முதல் 13-9-2019 பிற்பகல் மூன்று மணி வரை மட்டும் அலுவலக வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறும் கடைசி நாள்: 13 -9-2019 மாலை 5.30 மணி வரை.
    student admission
    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
Intro:Body:

சித்தா ஆயுர்வேத படிப்புக்கும்                        நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை                 சென்னை,                   சித்தா, ஆயுர்வேதா ,யுனானி,ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.                 இதுகுறித்து

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பி.எஸ்.எம்.எஸ். , பி.ஏ.எம்.எஸ். ,  பி.எச்.எம்.எஸ்.  மருத்துவ பட்டப்படிப்புகள்

,சுயநிதி இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு  இடங்களுக்கு 2019-20 மாணவர்கள் சேர்வதற்கு வரும் 28ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

 

    தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி  மருத்துவக் கல்லூரிகளில் 2019-20  ஆம் ஆண்டிற்கு பி.எஸ்.எம்.எஸ். , பி.ஏ.எம்.எஸ். , பி.யு.எம்.எஸ். , பி.எச்.எம்.எஸ்.  மருத¦துவ பட்டப்படிப்புகளில்  அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் அல்லது அதற்கு நிகரான தேர்வில் ( அறிவியல் பாடங்கள் (ம) ஆங்கிலம் எடுத்து ) தேர்ச்சி பெற்று மற்றும் 2019 மருத்துவப் பட்டப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  ( நீட்-2019 ) எழுதி, தேவையான தகுதி சதமான மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன  மேலும் தகுதிப் பற்றிய விவரங்களுக்கு வலைதள அறிவிக்கையை பார்க்கவும்   விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை   28-8-2019 முதல்                13-9-2019 பிற்பகல் 3. மணி வரை மட்டும் அலுவலக வலைதளமான                     www.tnhealth.org யிலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் விவரமான வலைதள அறிவிக்கை,  படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் விவரம்,  தகவல் தொகுப்பேடு  பொது மற்றும் சிறப்பு  விண்ணப்பதிவிறக்கம்  மற்றும்  அவற்றின் கட்டணம், குறைந்த பட்ச கல்வி தகுதி, அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும்  இதர விவரங்களுக்கு www.tn.health.org என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை பதிவிறக்கம்   செய்ய    நாள் :    28-08-2019 முதல்     13-09-2019 பிற்பகல் 3 மணி வரை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெற கடைசி நாள்: 13 -9-2019 மாலை 5.30 மணி வரை அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.                     இந்தப் படிப்புகளில் கடந்தாண்டு வரை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.