சென்னை விமான நிலையத்தில் பாலியல் குற்றவாளி கைது!
Published: May 22, 2023, 6:17 PM


சென்னை விமான நிலையத்தில் பாலியல் குற்றவாளி கைது!
Published: May 22, 2023, 6:17 PM
பாலியல் வன்புணர்வு மற்றும் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த கேரள மாநில இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் அபீல் அபுபக்கர் (32). இவர் மீது கேரள மாநிலம், திருச்சூர் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்புணர்வு மற்றும் மோசடி வழக்குப் பதிவுசெய்தனார். இதை அடுத்து திருச்சூர் போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர்.
இந்நிலையில் அபீல் அபூபக்கர் போலீசிடம் சிக்காமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இதை அடுத்து திருச்சூர் மாநகர காவல் ஆணையர் அபீல் அபூபக்கரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் என்.ஓ.சி எனப்படும் லுக் அவுட் நோட்டீஸ் போட்டு வைத்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: வேலைக்காக மஸ்கட் சென்ற பஞ்சாப் பெண்மணிக்கு நேர்ந்த கொடுமை...!
இந்த விமானத்தில் கேரள மாநில போலீசால் தேடப்படும் அபீல் அபுபக்கரும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த அதிகாரிகள், இவர் கேரள மாநில போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவரை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரளா மாநில போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கேரள மாநிலம், திருச்சூர் மாநகர போலீஸ் தனிப்படையினர் சென்னை விமான நிலையம் வந்து அபீல் அபுபக்கரை கைது செய்து கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!
இதையும் படிங்க: Ajith kumar: "வாழ்க்கை ஒரு அழகான பயணம்" – சுற்றுலா நிறுவனத்தைத் துவங்கிய ஏ.கே.வின் அட்வைஸ்!
