ETV Bharat / state

சென்னை வெள்ளம் எதிரொலி: ஒரே வாரத்தில் 5 கோடி மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 4:30 PM IST

சென்னை வெள்ளம் எதிரொலி: ஒரே வாரத்தில் 5 கோடி மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
சென்னை வெள்ளம் எதிரொலி: ஒரே வாரத்தில் 5 கோடி மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

Chennai Floods: சென்னையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,464.97 மெட்ரிக் டன் குப்பை அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, வெள்ளக்காடாக மாறிய சென்னை தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 5 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரத்து 530 கிலோ மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “மிக்ஜாம் புயலில் ஏற்பட்ட வெள்ளம் மீட்புப் பணி மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களில் பணி சவாலாக இருந்தாலும், சென்னை மாநகராட்சிக்கு சவாலாக இருக்கும் பணி என்பது குப்பைகளை அகற்றும் பணிகள் தான்.

சென்னை வரலாற்றில் இதுவரை இல்லாத குப்பைகள் நேற்று (டிச.12) அகற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மட்டும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 10,464.97 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளின் அதிக அளவு ஆகும். 6ஆம் தேதிக்கு பிறகு, தினந்தோறும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றும் நிலை மாறி, 7 ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 9 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் நிலையானது இருந்து வருகிறது. ஆனால், நேற்று மட்டும் 10,464.97 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம்.

மேலும் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மொத்தமாக 57,192.63 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். இது மட்டுமின்றி தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சரசாரியாக சென்னை மாநகராட்சி சேகரிக்கும் குப்பையின் அளவு என்பது 5,780 மெட்ரிக் டன். இது சென்னை பகுதிகளில், ஒரு நபர் 700 கிராம் குப்பைகளைப் போடுவார்கள். ஆனால், சென்னை வெள்ளத்தின் பிறகு தற்போது குப்பை அளவு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக 4, 5ஆம் தேதிகளில் குப்பை அகற்றும் பணிகள் மிகப்பெரிய சீரமங்களுக்கு இடையே நடைபெற்றது. அதன்பிறகு, 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை என ஆகிய 7 நாட்களில் 57,192.63 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றபட்டுள்ளது. இதில், 6,553.89 மெட்ரிக் டன் குப்பைகள் செடி மரம், கிளை போன்றவை ஆகும்.

6ம் தேதி அன்று 5,915 மெட்ரிக் டன் குப்பைகளும் 7ஆம் தேதி 6465 மெட்ரிக் டன் குப்பைகளும் 8ஆம் தேதி அன்று 7,705 மெட்ரிக் டன் குப்பைகளும், 9ஆம் தேதி அன்று 8476 மெட்ரிக் டன் குப்பைகளும், 10ஆம் தேதி அன்று 8,948 மெட்ரிக் டன் குப்பைகளும், 11ஆம் தேதி 9,215 மெட்ரிக் டன் குப்பைகளும், 12ஆம் தேதி 10,466.97 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 4,834 பேட்டரி வாகனங்கள், 135 காம்பெக்கட்டர் வாகனங்கள், 220 பெருநகர சென்னை மாநகராட்சி வாகனங்கள், லாரிகள் குப்பைகளை அகற்றி கொண்டு செல்கின்றன” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களவையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; குதித்தோடிய பார்வையாளரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.