ETV Bharat / state

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு

author img

By

Published : Oct 6, 2021, 3:17 AM IST

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

tn_che_04_ dpi_7209106
tn_che_04_ dpi_7209106

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலந்தாய்வு அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் இதில் பணி மாறுதல் வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்து பணியிடங்கள் காலி பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலருக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

Dpi
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.