Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது

author img

By

Published : Sep 26, 2021, 7:00 PM IST

storming operation  rowdies arrest  rowdies arrest by storming operation  sylendra babu  முற்றுகைச் செயல்பாடு  ரவுடிகள் கைது  ரவுடி  ஸ்டோமிங் ஆர்பரேஷன்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) மூலம் இதுவரை 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

storming operation  rowdies arrest  rowdies arrest by storming operation  sylendra babu  முற்றுகைச் செயல்பாடு  ரவுடிகள் கைது  ரவுடி  ஸ்டோமிங் ஆர்பரேஷன்

அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூவாயிரத்து 325 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 நபர்கள் ஆவார்கள்.

இனியும் வேட்டை தொடரும்

பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு இரண்டாயிரத்து 526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் ஆயிரத்து 110 என மொத்தம் ஆயிரத்து 117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொலைக் குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல் துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று காவல் துறைத் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்'' எனக் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: ’ரயில்வே பணி நியமன உத்தரவை திரும்பப் பெறுக’ - சு. வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.