ETV Bharat / state

தமிழ்நாடு எங்கள் நாடு; விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லை என்றால் ஓடுங்கள் - ஆளுநர் கருத்துக்கு சீமான் பதில்

author img

By

Published : Jan 7, 2023, 10:07 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு எங்கள் நாடு. இங்கு விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லை என்றால் ஓடுங்கள் என ஆளுநர் கருத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக் அண்மையில் மறைவைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள அன்வரின் வீட்டில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜன.7) அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைப் பேசிய சீமான், "தமிழகம் என்பது ஆளுநர் ஆர்.என்.ரவி, சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களுக்குச் சரியாக இருக்கும். எங்கள் நாடு "தமிழ்நாடு" (TamilNadu) தமிழ்நாடு என அறிஞர் அண்ணா பெயர் வைப்பதற்கு முன்பாகவே திருநெல்வேலி கல்வெட்டில் தமிழ்நாடு என்று இருக்கிறது.

எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் என்றுதான் போடுவார். தற்போது இருக்கும் முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் என்று தான் போடுகிறார். இரண்டுமே தவறுதான். தமிழ்நாடு முதலமைச்சர் என்பது பொருள் அல்ல. தமிழ்நாட்டு முதலமைச்சர் என்பது தான் பொருள். ஆளுநர் ஏதோ ஒன்று பேச வேண்டும் என்பதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு எங்கள் நாடு. விருப்பம் இருந்தால் இருங்கள். இல்லை என்றால் ஓடுங்கள். தேவையில்லாமல் பேசக்கூடாது.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக்கிற்கு அஞ்சலி
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக்கிற்கு அஞ்சலி

ஆதார் அட்டையே வேண்டாம் என்கிறோம். அதில், தனிமனித பாதுகாப்பில்லை. குடும்ப அட்டையை வைத்துத்தான் அனைத்தையும் கொடுக்கிறார்கள். குடும்ப அட்டை இருக்கும்போது, எதற்கு மக்கள் ஐ.டி.. குடும்ப அட்டையை வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் கொடுக்கிறீர்கள் என்றால் குடும்ப அட்டையே போதுமே. வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும்போது Inner line Permit வாங்கிக்கொண்டு தான் அனுமதிக்கிறார்கள். அதே மாதிரி தமிழ்நாட்டிலும் இன்னர் லைன் பர்மிட் போட வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து வருவோரின் உழைப்பு நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், ஓட்டுரிமை வழங்கக்கூடாது.

சென்னையில் 'ஜல்லிக்கட்டு' (Jallikattu) நடத்த வேண்டும் என்ற கமலின் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், ஏற்கவில்லை. வழக்கமாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் தடை விதிக்கிறார்கள் என்ற கோபம்தான் எங்களுக்கு, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் போதே கள்ள வாக்குகள் பதிவாகிறது. எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்ற ஆட்டோமேட்டிக் எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷின் முறை எப்படி இருக்கும். வெளியூர்களுக்கு செல்வோருக்குத் தபால் வாக்கு முறையை கொடுக்கலாம். ஆனால், எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்பது தவறுகளைத் தான் அதிகரிக்கும்.

ஹிட்லர் மக்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்றார். அதைத் தொடர்ச்சியாக, ஒன்பது ஆண்டுகளாக செய்து மோடி செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு சிற்றூர்களிலும் நடைபெற வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறதா? - சவால் விடும் கொங்கு ஈஸ்வரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.