ETV Bharat / state

விநாயகர் சிலைகளை கரைக்கும் விதிமுறைகள் - மாசு கட்டுப்பாடு வாரியம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 8:10 PM IST

விநாயகர் சிலைகளை கரைக்கும் விதிமுறைகள்
விநாயகர் சிலைகளை கரைக்கும் விதிமுறைகள்

விநாயகர் சிலைகள் வரும் 24ஆம் தேதி கரைக்கப்பட உள்ளதால், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை: விநாயகர் சிலைகள் வரும் 24ஆம் தேதி கரைக்கப்படவுள்ளதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்குப் பிறகு, வரும் 24 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது.

அதனை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றைக்கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
  • சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும்.
  • சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூமாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும்.
  • மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணி வகைகள் இருப்பின், அதனை ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு மறுபயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின் அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம்.
  • சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
  • வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்காமல் கூடுமானவரை வீட்டிலேயே வாளியில் நீர் நிரப்பி அதில் சிலையினை மூழ்க வைத்து கரைக்கலாம். தெளிந்த நீரினை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றினை உலரவைத்து தோட்டத்தில் மண்ணாகப் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பாதுகாப்பாக கரைத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழக மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னையில் 1500 சிலைகள் என, தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு விநாயகர்சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்கு பிறகு, வரும் 24ஆம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: சென்னை சாலைகளை கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.