ETV Bharat / state

மார்ச் மாதம் களமிறங்கும் RAPTEE எலக்ட்ரிக் பைக்.. உலக முதலீட்டாளர் மாநாட்டில் பெரும் வரவேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 10:11 PM IST

TN GIM 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவரையும் கவரும் வண்ணம் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு இணையாக RAPTEE எலக்ட்ரிக் பைக் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக் மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை கவர்ந்த RAPTEE எலக்ட்ரிக் பைக்
மக்களை கவர்ந்த RAPTEE எலக்ட்ரிக் பைக்

மக்களை கவர்ந்த RAPTEE எலக்ட்ரிக் பைக்

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இலக்கை நிர்ணயித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 35 நாடு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பல நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நிறுவனத்தில் சார்ந்த மக்கள் வருவார்கள் என்பதாலும் பல தரப்பட்ட மக்கள் வருவார்கள் என்பதால் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பல தனியார் நிறுவனங்கள் தயாரித்து உள்ள தயாரிப்பு பொருட்களையும் வரும் காலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய தயாரிப்பு பொருள்களின் மாதிரிகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதில் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்ற RAPTEE எலக்ட்ரிக் பைக் பொதுமக்களை அதிகம் கவர்ந்திருந்தது. ஏற்கனவே பல்வேறு வகையான எலக்ட்ரிக் பைக்குகள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பல்வேறு புதிய மாற்றங்களுடன் இந்த எலக்ட்ரிக் பைக் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக RAPTEE பைக் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் பைக்குகளுக்கு இணையாக 250சிசி வரை இந்த எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட நான்கு வருட உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்தார். மேலும் இளைஞர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த இருசக்கர வாகனத்தில் உட்புகுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த எலக்டரிக் பைக் சார்ஜ் செய்வது என்பது மிக எளிமையான ஒன்று எனவும் ,பொதுவாக இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்தே பல இடங்களில் சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது அந்த இடங்களிலே இந்த பைக்கிற்கு சார்ஜ் செய்து கொள்ளலாம் எனவும்,ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கி.மீ தொலைவு வரை பயணம் செய்யலாம் என RAPTEE பைக் நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 6.64 லட்சம் கோடி முதலீடுகள்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.