ராமாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாகப் புகார்

author img

By

Published : Aug 22, 2021, 7:11 PM IST

குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக புகார்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை: புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது எனப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளும் தரமற்று இருப்பதாக, அந்தக் குடியிருப்புவாசிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாகப் புகார்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கே.கே.நகர் கோட்டம் மூலம், ராமாபுரம் பாரதிசாலையில் 78 கோடியே 44 லட்சம் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிப்பிரிவு மூலம் கட்டி பயனாளர்களுக்கு 2019 நவம்பர் மாதம் வழங்கப்பட்டது.

இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த குடியிருப்பின் கட்டடத்தைத் தொட்டாலே சிமென்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருப்பதும் நிகழ்கிறது.

குடியிருப்புவாசிகள் கோரிக்கை

கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள்,கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இங்குள்ள அனைவரும் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, கட்டுமானத்தின் தரத்தை உறுதிபடுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புகள் தரமற்று கட்டப்பட்டிருப்பதாகப் புகார்

இதையும் படிங்க: 'வந்தாரை வாழவைக்கும் சென்னை'- முதலமைச்சர் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.