ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை ஆளுநர் மாளிகை அரசியாலுக்குகிறதா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 9:14 PM IST

Etv Bharat
Etv Bharat

Tamil Nadu Raj bhavan petrol bomb issue: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் முதல் தற்போது ஆளுநர் மாளிகை கையில் எடுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு (IPC) - 124 வரை இச்செய்தித் தொகுப்பு விவரிக்கிறது.

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரபல ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவரின் பின்புலத்தை தொடர்ந்து காவல் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், "ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு அரசியல் விளையாட்டை ஆளுநர் மாளிகை தற்போது தொடக்கி வைத்துள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவாயில் (எண் 1) முன்பு எப்போதுமே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் பாதுகாப்பாக இருக்கும். அப்போது குற்றம்சாட்டப்பட்ட கருக்கா வினோத்(42) தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். சாியாக ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் எண்-1 -ன் முன்வந்து, இரும்புத் தடுப்பு அருகே வந்து விழுந்தது. பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்யபட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் ஆணையர் கூடுதல் போலீஸ் கமிஷனர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, சம்பவ இடத்தை பார்வையிட்டார். "முந்தைய வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களையும் அவர் யார் யார் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறிந்து தொடர்ந்து விசாரனை ஆனது நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இதைத் தொடர்ந்து இன்று (அக்.26) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்துப் பேசினார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆளுநரிடம் காவல் ஆணையர் எடுத்துக் கூறியதாக தகவல் வெளியான நிலையில், சில மணி நேரத்தில் ஆளுநர் மாளிகையில் இருந்து, ஒரு அறிக்கை வருகிறது.

விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு: அதில் "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டும், காவல்துறையும் குற்றம்சாட்டி உள்ளது.

இதைத்தொடர்ந்து, நேற்று அளித்த முதல் தகவல் அறிக்கை தெரிவிப்பது, "ஆளுநர் மாளிகையில் உள்ள பிரதான நுழைவு வாயில் எண்-1 -க்கு நேர் எதிர்புறம் உள்ள நடைபாதையில் இருந்து, ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலை நோக்கி இரண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசினார். முதலாவது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் சாியாக ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் எண்-1 -ன் முன்வந்து, இரும்புத் தடுப்பு அருகே பலத்த சத்தத்துடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் இடத்துக்கு அருகே வந்து விழுந்தது.

கருக்கா வினோத்தை பிடிப்பதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் அவருக்கு நேர் எதிர்புறம் ஓடியபோது, அவர் மற்றும் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து மீண்டும் காவலர்களை நோக்கி வீசினார் எனவும். அந்த பாட்டிலும், முதலாவதாக வீசப்பட்ட பாட்டில் விழுந்த இடத்துக்கு அருகாமையில் பூந்தோட்டம் அமைந்த்துள்ள தடுப்புச் சுவர் மீது விழுந்தது. அப்போது கருக்கா வினோத்தை காவலர்கள் சேர்ந்து பிடிக்க முற்பட்டபோது, "என்னை பிடிக்க வந்தீங்கனா உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்" என்று மிரட்டினார். இருப்பினும், அவரை மடக்கிப் பிடித்து ஜே-3 கிண்டி காவல் நிலையத்துக்கு பிடித்து சென்று ஒப்படைத்ததாக, அந்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது."

தொடர்ந்து IPC 124-ஐ கையில் எடுக்கும் ஆளுநர் மாளிகை: இதற்கு முன்னதாக, ஆளுநர் மாளிகை சார்பில் காவல் ஆணையர் இடம் கொடுக்கபட்ட புகாரில், திமுகவை கடுமையாக விமர்சதித்துள்ளது. "திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் தொடர்ந்து பொதுக்கூட்டங்களிலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆளுநருக்கு அச்சுறுத்தல்கள் அவரது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் அவரைக் கட்டுப்படுத்தும் நோக்கமாக உள்ளன. என்று தெரிவிக்கபட்டுள்ளது”

மேலும், 2018 இல் தருமபுர ஆதீனம் அருகே நடந்த சம்பவத்தில் கூட, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்படவில்லை மற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத விளைவாக நேற்றைய சமப்வம் நடைபெற்றது என்று தெரிவித்தார்கள். ஆனால் தருமபுரம் ஆதீனம் சம்பவத்தில், ஆளுநரின் கான்வாய் அங்கிருந்து சென்ற பின்னரே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடதக்கது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை, வினோத் 124ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு செய்யபட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த 124ஆவது பிரிவு என்பது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ல், "ஜனாதிபதி அல்லது ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு'' என்பது ஆகும். இதற்கு முன்னால் 2018ஆம் ஆண்டு உதவி பேராசியர் நிர்மலா தேவி பிரச்சனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெயரும் அதில் அடிப்பட இதனை எழுதிய நக்கீரன் நாளிதழ் ஆசிரியருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ல் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கு இதுக்கு பொருந்தாது என்று உடனடியாக ஒரே நாளில் விடுவிக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: காவல் துறை மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.