ETV Bharat / state

திராவிடத்தை திமுக தாங்கி பிடிப்பது பிரிவினைவாதத்திற்கா? - கிருஷ்ணசாமி கேள்வி

author img

By

Published : May 10, 2023, 10:07 AM IST

திராவிடத்தை திமுக தாங்கி பிடிப்பது பிரிவினைவாதத்திற்கா? - கிருஷ்ணசாமி கேள்வி
திராவிடத்தை திமுக தாங்கி பிடிப்பது பிரிவினைவாதத்திற்கா? - கிருஷ்ணசாமி கேள்வி

திராவிட மாடலில் என்ன உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கிருஷ்ணசாமி, “புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் மது விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும் பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்க உள்ளது. பேரணி முடிந்த பிறகு ஆளுநரை சந்தித்து, திமுக தேர்தலுக்கு அளித்த வாக்குறுதியை குறித்து மனு ஒன்றை அளிக்க உள்ளோம். இந்த பேரணிக்கு திமுக தவிர அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.

ஆளுநர் ஆளும் கட்சி பற்றி குற்றம் சாட்டும்போது, அதை எளிதாக கடந்து விட முடியாது. அவர் எழுப்பிய கேள்விக்கு ஏன் பத்திரிகையை அழைத்து முதலமைச்சர் இன்னும் பேசவில்லை? வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

பால் விலை, மின்சாரம் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி சிறந்த ஆட்சி, ஈராண்டு சாட்சி என்று கூற முடியும்? திராவிட மாடலில் என்ன உள்ளது, என்ன அம்சம் உள்ளது என்று முதலமைச்சர் விளக்க வேண்டும்.

திராவிடம் என்ற சொல்லை திமுக தாங்கி பிடிப்பது பிரிவினை வாதத்தை விதைப்பதற்குத்தானா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம். தேர்தல் வந்தால் யார், யார் உடனாவது கூட்டணியில் இருப்பார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூர் நகர திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.