ETV Bharat / state

மாண்டஸ் புயல்; கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

author img

By

Published : Dec 8, 2022, 7:40 PM IST

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொது மக்கள் பயணங்களை தவிர்த்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாண்டஸ் புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு வலியுறுத்தல்
மாண்டஸ் புயல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வருகின்ற 9ஆம் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும்போது மரங்களின்கீழ் நிற்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீர்நிலைகளின் அருகிலும் பலத்த காற்று வீசும் போது திறந்தவெளியிலும் தன் படம் (Selfie) எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக சங்க மாவட்ட நிர்வாக அறிவுறுத்தும்போது அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல் ட்விட்டர்) TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, தீப்பெட்டி, மின்கலன்கள், மருத்துவ கட்டு உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்டப்பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கலைத்திருவிழாவில் சிறந்து விளங்கினால்...' - முதலமைச்சர் அறிவித்த சூப்பர் பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.