ETV Bharat / state

புயல் செய்த செயல்..! குப்பை மேடாக காட்சியளிக்கும் மெரினா கடற்கரை.. உடனடி நடிவடிக்கை என மாநகராட்சி ஆணையர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 6:04 PM IST

Updated : Dec 2, 2023, 8:59 PM IST

மெரினா கடற்கரையில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மெரினா கடற்கரையில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Public Request to Remove Garbage Waste at Marina Beach: குப்பை மேடாக காட்சியளிக்கும் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள குப்பைகளையும், ஆகாயத் தாமரை செடிகளையும் அகற்றக்கோரி தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் ஈ.டிவி பாரத் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவு மழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மக்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக அடையாறு வழித்தடத்தில் செல்லக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் 6 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டு, அதன்பிறகு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, புழல் ஏரி மற்றும் பூண்டி ஏரியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் நீர் வரத்து அதிமாகும்பட்சத்தில் திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு அதிகமாக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

இந்நிலையில், அடையாறு வழித்தடம் மற்றும் கூவம் வழிதடத்தில் உபரி நீர் அதிகமாக திறந்துவிடப்பட்டதன் காரணமாக, ஆற்றில் இந்நாள் வரை தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் அகற்றப்படாமல் இருந்த ஆகாயத் தாமரை செடிகள் அனைத்தும் கடலில் கலந்துள்ளன.

மேலும், இன்று (நவ. 2) காலை முதல் கடற்பரப்பின் மேல் காற்றின் வேகம் அதிகமானதன் காரணமாக, கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடலில் கலந்திருந்த குப்பைகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகள் அனைத்தும் டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால், சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்கக் கூடிய மெரினா கடற்கரை, தற்போது காண்பதற்கே அறுவறுப்பான இடமாக காட்சியளிக்கிறது. இதனால் முடிந்தவரையில் மழைக்கு முன்னரே மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனெனில், மழை பொழிவு அதிகமானால் குப்பைகள் அனைத்தும் கடற்கரை மணலில் அப்படியே தேங்கிவிடும் என்பதாலும், ஏரிகளிலிருந்து உபரி நீர் மேலும் திறந்துவிட வாய்ப்புள்ளதாலும், மேலும் குப்பைகள் அதிகமாகும். இதனால் துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளதாக பட்டினம்பாக்க மீனவர்கள் தெரிவிக்கின்றனர். முடிந்தவரையில் டன் கணக்கில் கடற்கரை ஓரமாக கரை ஒதுங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இது போன்ற மழைக் காலங்களில் குப்பைகள் எங்கு அதிகம் குவிந்துள்ளது என பொதுமக்கள் உடனுக்குடன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், குப்பைகளை விரைந்து அகற்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

இதுபோன்ற சிறிய சிறிய விஷயத்தில் மக்கள் அலட்சியம் காட்டுவதால்தான், மழை நீர் செல்லக்கூடிய வழிகளில் குப்பைகள் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் அதன் வழியே செல்லாமல் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்குகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் குப்பைகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக இதுவரை மாநகராட்சிக்கு யாரும் தகவல் தெரிவிக்காத நிலையில் ஈடிவி பாரத் நிறுவனம் சார்பில் தெரிவித்ததற்கு நன்றி" எனக் கூறினார். மேலும், இது போன்று ஊடக நண்பர்களும், பொதுமக்களும் குப்பைகள் குவிந்துள்ள இடத்தை குறிப்பிட்டு சொன்னால் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்படும் எனவும் தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். மேலும், பருவ காலங்களில் பொதுமக்களும் மாநகராட்சிக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் பட்சத்தில், அதிகாரிகளும் விரைந்து செயல்பட ஏதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு இந்த 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அப்டேட்!

Last Updated :Dec 2, 2023, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.