ETV Bharat / state

முகிலன் உயிருடன் இருக்கிறாரா ? - தமிழ்நாடு அரசே பதில் சொல்

author img

By

Published : Jun 2, 2019, 8:27 AM IST

தமிழ்நாடு அரசே பதில் சொல்

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசைக் கண்டித்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று காணொளி காட்சி ஒன்றை முகிலன் வெளியிட்ட அன்றிலிருந்து அவர் காணாமல் போய் நூறு நாட்களுக்கு மேல் ஆகிறது.

இதற்கிடையே, சிபிசிஐடி கைவசம் இருக்கும் இந்த வழக்கில் சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற அச்சம் எல்லோரையும் தொற்றிக் கொண்டதால் தமிழ்நாடு அரசு இப்பிரச்னையை திசை திருப்ப முயற்சித்ததாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இதனைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

தமிழ்நாடு அரசே பதில் சொல்

அப்போது, பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கும், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கும் முகிலன் காணாமல்போன விவகாரத்தில் இருக்கும் முடிச்சை அவிழ்க்கும் பொறுப்பு உள்ளது என்றும் ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத அரசாக தமிழ்நாடு அரசு இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது எனத் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், தமிழ்நாடு அரசின் கேடு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் போராடிய முகிலன் காணாமல்போய் 100 நாட்கள் ஆகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நிலைமையை தமிழ்நாடு அரசு கூறவில்லை எனவும் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக செய்தியை திசை திருப்ப அரசு முயற்சிப்பதாகவும் கூறினார்

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறுகையில், எடப்பாடி அரசு வீட்டு நாய்க்குட்டி காணாமல் போயிருந்தால் கூட காவல்துறை இந்நேரம் கண்டுபிடித்து இருக்கும் என்றும் போராடியவருக்கு எதிராக தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாகவும் காவல்துறை செயல்படுவதாகவும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும் அல்லது முகிலனை முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர். நல்லகண்ணு கூறுகையில், பல போராட்டங்கள் நடத்தியும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் உண்மையை வெளிக்கொண்டுவரும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் கூறினார்.

Intro:முகிலன் உயிருடன் இருக்கிறாரா தமிழக அரசே பதில் சொல் இது வர்ணம் ஆ,ர்,நல்லகண்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்


Body:முகிலன் உயிருடன் இருக்கிறாரா தமிழக அரசே பதில் சொல் இது வர்ணம் ஆ,ர்,நல்லகண்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று காணொளி காட்சி ஒன்றை வெளியிட்டார் முகிலன் அன்றிலிருந்து ஆர் காணாமல் போய் நூறு நாட்களுக்கு மேல் ஆவதாகவும் கூடங்குளம் அணு உலை போராட்டம் காவிரி ஆற்றங்கரையில் மலர்க்கணைகள் எதிரான போராட்டம் தாது மணல் கொள்ளை கிரானைட் கொள்ளை கொண்ட சுற்றுச்சூழல் போராட்டங்களில் பங்காற்றியவர்


கடந்த பிப்ரவரி 25ஆம் நாள் முதல் மகனை தேடும் பணி சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு ஆணையிட்டது சிபிசிஐடி விசாரணையில் சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லாததால் உயிருடன் இருக்கிறாரா என்ற அச்சம் எல்லோரையும் தொற்றிக் கொண்டதால் தமிழக அரசு இப்பிரச்சினையை திசை திருப்ப முயற்சித்ததாகவும் அவற்றை கண்டித்தவர்கள் எதிராகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா , திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன் இயக்குனர் கவுதமன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் தமிழ் தேச மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிழ்நேயன் நடிகர் பொன்வண்ணன் அதில் கலந்து கொண்டனர்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில்.

எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும் அவர்களில் வீட்டுப் பிள்ளைகளுக்கு இது நடந்திருந்தால் அல்லது கமிஷனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு இவ்வாறு நடந்திருந்தால் உடனே பார்த்து இருக்கப்படும் என்று கூறினார்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தமிழக அரசின் கேடுவிளைவிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் போராடிய முகிலன் காணாமல் போய் 100 நாட்கள் ஆகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் நூறு நாட்கள் ஆகும் நிலையில் அவர் நிலைமையை தமிழக அரசு கூறவில்லை எனவும் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக செய்தியை திசை திருப்ப தமிழக அரசு முயற்சிப்பதாகவும் கூறினார்

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறுகையில் எடப்பாடி அரசு வீட்டு நாய்க்குட்டி காணாமல் போயிருந்தால் கூட காவல்துறையின் நேரம் கண்டுபிடித்து இருக்கும் என்றும் போராடியவருக்கு எதிராக தமிழக அரசுக்கு ஆதரவாகவும் காவல்துறை செயல்படுவதாகவும் கூறினார்

சிபிஐ பொதுச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் பேசுகையில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட மற்றும் ஸ்டெர்லைட் தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களுக்கு எதிராக போராடிய அகிலன் என்று தமிழக அரசு சொல்ல வேண்டும் என்றும் ஆளும் மோடி அரசு மற்றும் எடப்பாடி அரசு இன்னும் பல போராடும் முகிலன் களை காணாமல் போக செய்வார்கள் என்றும் எனவே எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்றும் அல்லது முகிலனை முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறினார்


ஆர் நல்லக்கண்ணு கூறுகையில் பல போராட்டங்கள் நடத்தியும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தமிழக செயல்படுவதாகவும் முகிலனை மறைத்து வைத்திருப்பதாகவும் இதை தமிழக அரசு திசை திருப்ப பார்ப்பதாகவும் உடனே முகிலனை பற்றி அனைத்து விவரங்களையும் கூற வேண்டும் அல்லது ஆறாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அல்லது முன்னிறுத்தவும் வேண்டும் என்று கூறினார்


உண்மையை வெளிக்கொண்டு வரும் வரை போராட்டங்கள் ஓயாது எனவும் இவ்வார்ப்பாட்டத்தில் வாயிலாக தமிழக அரசுக்கு அடுத்த கட்டமாக இப்போது தமிழகம் தழுவிய அளவில் விரிவாக்குவோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாக கூறினார்

ஆறு நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த செயற்பட்டார்கள் கண்டன உரையாற்றினர்




Conclusion:காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.