ETV Bharat / state

'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஓர் உயர்மட்டக் குழு'

author img

By

Published : May 9, 2022, 3:18 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஓர் உயர்மட்டக் குழு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

proposed-to-set-up-high-level-committee-to-document-all-idols-in-tamil-nadu-and-ensure-their-safety-according-to-police-policy-note தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஓர் உயர்மட்டக் குழு
proposed-to-set-up-high-level-committee-to-document-all-idols-in-tamil-nadu-and-ensure-their-safety-according-to-police-policy-note தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஓர் உயர்மட்டக் குழு

சென்னை சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் (கேள்வி பதில் நேரம்) நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்திற்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்தநிலையில், காவல் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சில கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில், "சிலை திருட்டு தடுப்புப்பிரிவினரால் சிலைக்கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 300 உலோகச்சிலைகளை முப்பரிமாண வீடியோ மற்றும் படங்களாக எடுத்து, சென்னை ஐஐடி மற்றும் திருநெல்வேலி இந்துக்கல்லூரியின் உதவியுடன் ஒரு முன்னோடி திட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுச்சிலை திருட்டு தடுப்புப் பிரிவு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில்  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

மேலும், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை ஆகிய துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தி, அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.