ETV Bharat / state

லஞ்சம் கேட்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள்; தனியார் பள்ளிகள் சங்கத்தினர் புகார்!

author img

By

Published : Mar 16, 2023, 9:24 AM IST

private schools association complained that district education officers of the private schools are demanding bribes
தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் கேட்பதாக தனியார் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்

தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பரிந்துரை வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும், பொருட்காட்சி, புத்தக கண்காட்சிக்கு பணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதாகவும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் புகார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் கேட்பதாக தனியார் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்

சென்னை: திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) முடிந்து போன பொருட்காட்சிக்குத் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் செய்வதாகவும், பள்ளிகளில் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்குவதற்கு வேலூர் மற்றும் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) மீது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் நந்தகுமார், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, ”வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) , சேலம் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) ஆகியோர் தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகாரம் வழங்குவதற்குப் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக பல்வேறு பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்குத் தற்காலிக அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்க நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு ரூபாய் 25,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு ரூ.50,000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ரூ.1,50,000 லட்சம் என பள்ளி நிர்வாகிகளை கேட்டு மிரட்டி வசூல் செய்கின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சென்ற மாதம் நடந்து முடிந்த தொழில் வர்த்தகப் பொருட்காட்சிக்குத் தனியார் பள்ளிகள் 10 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்.

private schools association complained that district education officers of the private schools are demanding bribes
தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் கேட்பதாக தனியார் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்

புத்தக கண்காட்சிக்குப் பணம் கொடு, தமிழரசு பத்திரிக்கைக்கு அனைத்து பள்ளிகளும் ரூ.2000 கட்ட வேண்டும் என்று கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு போடுகிறார். எனவே இவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "வாத்தியாருங்க லட்சணம் தெரியும்.. உங்க வீடா இருந்தா இப்படி செய்வீங்களா?" அரசு பள்ளியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.