ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தின் திறப்பு தள்ளி வைப்பு

author img

By

Published : Mar 24, 2023, 5:34 PM IST

Postponing the opening of the integrated new terminal at Chennai Airport
Postponing the opening of the integrated new terminal at Chennai Airport

சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாததால் தென் மண்டலத்தில் உள்ள 12 விமான நிலையங்களின் மின் பொறியாளர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணிகள் நடக்கின்றன. இதைத்தொடர்ந்து, வரும் ஏப்ரல் 8 அல்லது ஏப்ரல் 14 ஆகியவற்றில் ஏதாவது ஒரு தேதியில் பிரதமர் நரேந்திர மோடி புதிய முனையத்தை திறந்து வைப்பார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த புதிய முனையத்தில், பேஸ்மென்ட் என்ற கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில், சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணியருக்கான, வழக்கான நடைமுறைகள் கையாளப்படும். இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் ஐந்து தளங்களுடன் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய விமான முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டதால், தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கருவிகள், உபகரணங்களின் சோதனைகள் நடந்து வருகின்றன.

இந்தப் புதிய முனையத்தில், பேஸ்மென்ட் கீழ்தளத்தில், விமான பயணிகள் லக்கேஜ்கள் உடைமைகள் கையாளப்படும் பணிகள், இந்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. அதேபோல் புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளை கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி விமான போக்குவரத்து துறை அமைச்சர் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த புதிய முனையத்தினை, ஒட்டு மொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம், வரும் 27ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முறைப்படி தொடங்கி வைப்பார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கடந்த 14ஆம் தேதி தெரிவித்தனர். மேலும் பிரதமர் சென்னை வருகை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அடுத்த ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

ஆனால், விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தபடி, பிரதமர் வருகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததால், வரும் 27ஆம் தேதி புதிய விமான முனையம் திறப்பு கேள்விக்குறியானது. மேலும் புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தாலும், மின் கருவிகள், இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது.

airport opening delayed_
சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தின் திறப்பு தள்ளி வைப்பு
இதையடுத்து தெற்கு மண்டலத்தில் உள்ள 12 விமான நிலையங்களின், மின் பொறியாளர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின், கிளியரன்ஸ் சான்றிதழ் வந்த பின்பு தான், புதிய முனையத்தை பிரதமர் வந்து திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.எனவே, இம்மாதம் 27ஆம் தேதி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தின் திறப்பு விழா, தள்ளி வைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு, வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி புதிய முனையத்தின் திறப்பு விழா நடக்கும். பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித் - நேரில் சென்று இரங்கல் தெரிவித்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.