ETV Bharat / state

நாளை நடக்கவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

author img

By

Published : May 21, 2023, 5:58 PM IST

நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (BT Deployment counseling)  நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் அதிகமாக உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பாடவேளை இல்லாவிட்டால் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என கூறுகின்றனர். மாணவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் கணக்கெடுக்கப்பட்டு, உபரியா உள்ளவர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, 'முதுகலை ஆசிரியர்கள் போதிய பாடவேளை இல்லாததால் கீழ் வகுப்புகளுக்கு இறக்கம் செய்யப்பட்டதால் பல்வேறு பள்ளிகளில பட்டதாரி ஆசிரியர்களே குறிப்பிட்ட பாடத்திற்கு இல்லாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே தெரிவித்தபடி 150 க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 6 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கி, மொத்தம் ஆறு பட்டதாரி பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி இந்த குளறுபடிகளை சரி செய்யும் வரை பணி நிரவலை ஒத்தி வைத்ததற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், 'பள்ளிக்கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அட்டவணைப்படி, திங்கட்கிழமை பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நிலவரப்படி பணி நிரவல் நடத்தப்படும் என்பதால், இந்த ஆண்டு அடிப்படையில் அதை நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நாளை நடத்த திட்டமிட்டு இருந்த பணி நிரவல் கலந்தாய்வினை தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உத்தரவிட்ட பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது' என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வட போச்சே!.... 'வெட்டி பந்தா' பாஜக நிர்வாகியின் அலப்பறை! காமெடி ஸ்டோரியின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.