ETV Bharat / state

"சனாதனத்தை ஒழிக்கவே 'இந்தியா' கூட்டணி" - அமைச்சர் பொன்முடி கருத்து; அண்ணாமலை பகிர்ந்த வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 12:54 PM IST

அமைச்சர் பொன்முடி மற்றும் அண்ணாமலை
அமைச்சர் பொன்முடி மற்றும் அண்ணாமலை

K Annamalai Vs K Ponmudi: சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காகவே 26 கட்சிகள் இணைந்து I.N.D.I.A(இந்தியா) மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோவை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை: சென்னையில் கடந்த 2-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியாவைப் போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் பாஜக நேரடியாகவும், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள திரிணாமுல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உதயநிதியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று மறைமுகமாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாமியாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது. அதோடு அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவார காலத்திற்கு பிறகு இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.

  • DMK Minister Thiru Ponmudi reaffirms that the I.N.D.I. alliance was formed on the plank of opposition to Sanatana Dharma.

    Eradicating Hinduism seems to be a single-point agenda of the parties in the I.N.D.I. Alliance.

    This is the true face of I.N.D.I. Alliance.

    It is also… pic.twitter.com/vxq3eRzpM5

    — K.Annamalai (@annamalai_k) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "I.N.D.I.A(இந்தியா) கூட்டணி சனாதன கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டணி, தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை. சமத்துவத்தை உருவாக்க வேண்டும், சிறுபான்மை சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும், ஆண் - பெண் சமத்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டது தான் இந்த 26 கட்சிகள் சேர்ந்துள்ள 'இந்தியா' கூட்டணியின் நோக்கம்" என்று பேசியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, "திமுக அமைச்சர் பொன்முடி ’இந்தியா’ கூட்டணி சனாதன தர்மத்தை எதிர்த்து உருவாக்கப்பட்ட கூட்டணி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் ஒற்றைப்புள்ளி அஜந்தாவாக உள்ளது என்பது தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "குடிமராமத்து பணி.. அப்படினா ஈபிஎஸ்க்கு என்னனே தெரியாதே!" - அமைச்சர் துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.