ETV Bharat / state

எந்த தகவல் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்: காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

author img

By

Published : Oct 31, 2022, 10:53 PM IST

கோவை கார் வெடிப்புச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்தத் தகவல் கிடைத்தாலும் விரைந்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்

தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்
தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்

சென்னை: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. சென்னை போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் தமிழக காவல்துறை சார்பில் கமாண்டோ படையினர், ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், காவல் வாத்தியக் குழுவினர், மகளிர் கவாத்து குழுவினர் என சுமார் 500 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவல் துறையினரின் அணிவகுப்பு பேரணியானது போர் நினைவுச்சின்னம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் தொடங்கி, கொடிமர இல்ல சாலை வழியாக முத்துசாமி பாலம் வரை சென்று மீண்டும் போர் நினைவுச்சின்னம் அருகே வந்து நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் காவல் துறையினர் ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, 'தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. காற்றாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மாஞ்சா நூல் விற்பவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்' எனவும் தெரிவித்தார்.

மேலும், மழைக்காலத்தைத் தொடர்ந்து வட சென்னைப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும் தேவையான ஏற்பாடுகள் காவல்துறையால் செய்யப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

'பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்'

மேலும், கோவை கார் வெடிப்புச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரித்து வருவதாகவும், அவர்கள் விசாரிக்கும்போது காவல்துறை அதில் தலையிட்டு விசாரிக்க முடியாது என்ற அவர், காவல்துறைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் காவல்துறை அதுகுறித்து விரைந்து விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விரைவில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.