ETV Bharat / state

ரூ.30 ஆயிரம் லஞ்சம்.. கம்பி எண்ணும் போலீஸ் அதிகாரி!

author img

By

Published : Dec 3, 2022, 3:38 PM IST

Updated : Dec 3, 2022, 4:48 PM IST

வழக்கை சுமூகமாக முடித்து தருகிறேன் என கூறி ரூ.30,000 லஞ்சம் வாங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முகாம் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கை முடிக்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற காவல் முகாம் கண்காணிப்பாளர் கைது
வழக்கை முடிக்க ரூ.30,000 லஞ்சம் பெற்ற காவல் முகாம் கண்காணிப்பாளர் கைது

சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட தாம்பரம் மாவட்ட துணை காவல் ஆணையர் அலுவலகத்தில், முகாம் கண்காணிப்பளராக சிவபெருமாள் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.

இது குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார். இதில், திருவள்ளூர் மாவட்டம் பெருங்காவூரைச் சேர்ந்த செல்வி மீனா என்பவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதாக கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்பர் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அக்பர், தனக்கு தெரிந்த தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் சிவபெருமாள் என்பவரிடம் கூறி பணத்தைப் பெற்றுத் தருகிறேன் என அவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இந்த வழக்கை சுமூகமாக முடித்துத் தருகிறேன் என கூறிய முகாம் கண்காணிப்பாளர் சிவபெருமாள், கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர் ஏற்கனவே அந்த வழக்கை விசாரணை மேற்கொண்டதால், அவரிடம் சொல்லி உங்கள் பணத்தை பெற்று தருகிறேன் என அக்பரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஆய்வாளர் விஜயலட்சுமி, ‘எனக்கும் அந்த வழக்குக்கும் தற்போது சம்பந்தமில்லை. நீங்கள் உயர் அலுவலர்களை சென்று பாருங்கள்’ என தெரிவித்துள்ளார். இருப்பினும் சிவபெருமாள், ஆய்வாளருக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி 20,000 ரூபாயை அக்பரிடம் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து போக்குவரத்து செலவு என 10,000 ரூபாய் பெற்றுள்ளார். இதற்காக அக்பர், செல்வி மீனாவிடம் இருந்து பணத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்த நிலையில் 30,000 ரூபாய் பணம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அக்பர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சிவபெருமாள் மீது புகார் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் சிவபெருமாளை விசாரணை செய்ததில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவபெருமாளை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.1 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

Last Updated : Dec 3, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.