ETV Bharat / state

'மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்' - ராமதாஸ்

author img

By

Published : May 15, 2020, 9:45 PM IST

சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதலமைச்சரின் நேரடி தலையீடு அவசியம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk leader ramadoss demand tamilnadu cm to rescued tamil people from maharastra
pmk leader ramadoss demand tamilnadu cm to rescued tamil people from maharastra

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, 'திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் உள்ள கிழக்கு வாசை பகுதியில் வேலை செய்து வந்த அவர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்தை இழந்து, ஒருவேளை உணவிற்கே வழியின்றித் தவித்து வருகின்றனர். இதனால் சொந்த ஊருக்குத் திரும்ப அரசு அறிவித்த இணையதளத்தில் பதிவு செய்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் அலுவலர்களும் 216 பேருக்காக தனி ரயிலை இயக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலுள்ள தமிழர்களை அழைத்து வருவதற்கான, தமிழ்நாடு அரசின் பொறுப்பு அலுவலர் பூஜா குல்கர்னியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 216 பேரும் சொந்த ஊர் திரும்ப தனிப் பேருந்துகளை ஏற்பாடு செய்தால், அவற்றுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் பேருந்தினை ஏற்பாடு செய்வதற்காகவே எட்டு லட்ச ரூபாயினை செலுத்தவேண்டும். இதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நன்கொடை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை உணவிற்கே வழியின்றி, சொந்த ஊர் திரும்ப அரசிடம் உதவி கேட்பவர்களிடம் எப்படி அவ்வளவு பணம் இருக்கும்? மகாராஷ்டிரா அரசு அலுவலர்களிடம் பலமுறை உதவிகோரியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.