ETV Bharat / state

என்னது இளையராஜாவுக்கு பாரத ரத்னாவா? தேர்தல் அறிக்கையில் பகீர் கிளப்பும் பாமக

author img

By

Published : Mar 15, 2019, 1:53 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தேர்தல் களம் காண தயாராகி வருகின்றன. இத்தேர்தலில் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியோடு, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணி பட்டியலில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் பாமக கட்சிக்கு 7 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. மொத்தம் 94 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட, தனியார் டிவி பெண் நிருபர் கெளசல்யா பெற்று கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில் மாநிலங்களுக்கு அதிகாரம், வேளாண்மை, கல்வி, மது புகை ஒழிப்பு, முத்தலாக், 7 பேர் விடுதலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா ஆகியவைகள் முக்கிய அம்சங்களாக எடுத்து கொள்ளப்பட்டன.

இதையடுத்து பேசிய ராமதாஸ், தேர்தல் அறிக்கை புத்தகம் 94 பக்கங்களை கொண்டது என்றும் சமூக நீதிக்காக பாமக உழைத்து வருகிறது என்றும் கூறினார். இது குறித்து மேலும் அவர் பேசுகையில்,தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் எனவும், கேந்திரிய வித்யாலயா போல கிராமங்கள் தோறும் இலவச கல்வியை நாங்கள் தருவோம் எனவும் உறுதி அளித்தார்.

தமிழகத்துக்கு வரும் நதிகளின் நதி நீரை முழுமையாக பெற்று தருவோம் என்று கூறிய ராமதாஸ், நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் எனக் கூறினார்.

Intro:Body:

ராமதாஸ்: தேர்தல் அறிக்கை வெளியிடுட ஊடகத்தை சேர்ந்த பெண் நிருபர் பெற்று கொள்வார்..



அவர் காவிரி டிவி பெண் நிருபர் கௌசல்யா



மாநிலங்களுக்கு அதிகாரம், வேளாண்மை, கல்வி, மது புகை ஒழிப்பு, முத்தலாக், 7 பேர் விடுதலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா ஆகியவை முக்கிய அம்சங்கள்....



தேர்தல் அறிக்கை புத்தகம் 94 பக்கங்களை கொண்டது...





சமூக நீதிக்காக பாமக உழைத்து வருகிறது - ராமதாஸ்

தமிழகத்தின் உரிமைநிலை நாட்டப்படும் - ராமதாஸ்

வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படும் - ராமதாஸ்

கேந்திரிய வித்யாலயா போ லகிராமங்கள் தோறும் இலவச கல்வி தருவோம் - ராமதாஸ்

மருத்துவமனைகள் அமைக்கப்படும்



தமிழகத்துக்கு வரும் நதிகளின் நதி நீரை முழுமையா கபெற்றுத்த தருவோம் - ராமதாஸ்

நதிகள் தேசிமயமாக்க பாடுபடுவோம். - ராமதாஸ்

நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கபடும் - ராமதாஸ்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.