ETV Bharat / state

ஒருபக்கம் ஆக்கிரமிப்பு, மறுப்பக்கம் கழிவுநீர்; நெடுங்குன்றம் மக்களில் அவலநிலை!

author img

By

Published : Dec 2, 2022, 6:09 PM IST

Updated : Dec 4, 2022, 11:10 AM IST

செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சிரமம்
செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சிரமம்

செங்கல்பட்டு நெடுங்குன்றம் ஊராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செங்கல்பட்டு: நெடுங்குன்றம் ஊராட்சியில், எஸ்.எஸ்.எம். நகர், டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பல நகர்கள் உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள விவேகானந்தர் சாலை என்.ஜி.ஓ. நகரையும், எஸ்.எஸ்.எம். நகரையும் இணைக்கும் முக்கிய சாலையில் தினமும் 5,000க்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன.

இதுமட்டுமின்றி இதுதான் 3,000 வீடுகள் கொண்ட எஸ்.எஸ்.எம். நகர் நுழைவுக்கு பிரதான சாலையாக உள்ளது. வரைபடத்தில் 50-60 அடி சாலையாகவுள்ள இது, நிஜத்தில் 20அடி சாலையாகத்தான் உள்ளது. காரணம், தனியார் கட்டுமானத்திற்காக சாலையின் பெரும்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுதான் என்கின்றனர், சமூக ஆர்வளர்கள்.

மேலும் மற்றொரு நகரிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர், தினமும் இரவு தெருவில் வெளியேற்றப்பட்டு இந்தப் பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவதால் மீதமுள்ள 30 அடி சாலையில், வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலகம் என்று அலைந்து முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. சரியான மழை நீர் வடிகால் வசதி இல்லாதது, கழிவு நீரை சிறிதும் மனசாட்சி இன்றி தெருவில் விடுவது, இது குறித்து தெரிந்துமே நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் என அனைத்து தரப்பிலும் அலட்சியமே நிலவுகிறது என புலம்புகின்றனர், அப்பகுதியில் குடியிருப்போர்.

செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சிரமம்

இது குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ’நிரந்தர வடிகால் அமைக்க சுமார் ரூ.ஆறு கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் அவதி

Last Updated :Dec 4, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.