ETV Bharat / state

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம்

author img

By

Published : Apr 11, 2021, 12:52 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு வழிகாட்டிய விதிமுறைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம்
கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம்

கோயம்புத்தூர்: காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தகுந்த இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கும், பேருந்தில் அதிக கூட்டமிருந்ததால் நடத்துநருக்கும், ஓட்டுநர் ஆகியோருக்கும் மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

தமிழ்நாடு அரசின் ஆணைப்படி முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், பேருந்துகளில் அதிகக் கூட்டம் இருந்தால் நடத்துநர், ஓட்டுநர் ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ஐந்து மண்டலங்களில், மண்டலத்திற்கு 2 குழுக்கள் வீதம் 40 பேர் கரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியிலும் ஈடுபடவிருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரள மருத்துவக் குப்பைகள் பொள்ளாச்சியில் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து கமல் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.