ETV Bharat / state

EPS பெயர் அங்கீகாரம், கோடநாடு விவகாரம் - OPS கொடுத்த அந்த ரியாக்‌ஷன்!

author img

By

Published : Jul 11, 2023, 12:42 PM IST

Updated : Jul 11, 2023, 2:41 PM IST

Kodanad case
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு(Kodanad case) விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

EPS பெயர் அங்கீகாரம், கோடநாடு விவகாரம் - OPS கொடுத்த அந்த ரியாக்‌ஷன்

சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, 'ஜெயலலிதாவின் மனதிற்கு பிடித்த இடம் கோடநாடு. இங்கு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 6 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

விசாரணை அமைப்புகள் மாறி மாறி வந்ததே தவிர, அதில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது தெரியவில்லை' என ஓபிஎஸ்ஸின் அறிக்கையை வைத்திலிங்கம் படித்தார். இதற்காக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வருவாய் மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இது குறித்த விசாரணை தேவை என்பதை அப்போதே யாரிடம் சொல்ல வேண்டுமோ அவர்களிடம் வலியுறுத்தினேன். ஆனால், 6 ஆண்டுகள் கடந்தும் விசாரணை கிடப்பில் உள்ளது.

விசாரணையை விரைந்து நடத்தக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையை விட்டு, வெளியே வந்த சூழல் வேறு, தற்போது உள்ள சூழல் வேறு. டெல்லியில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு இன்னும் எனக்கு அழைப்பு வரவில்லை.

பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டாலும், அது இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் விரைவில் மாநாடு நடத்தப்படும். தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றோம்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமசந்திரன், "விரைவில் அடுத்த மாநாடு குறித்த தேதி அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு தங்களுக்கு இதுவரை எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதே நேரத்தில் பாஜகவின் தலைவர்களுடன் கூட்டணி குறித்து நாங்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம்.

அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சூழ்நிலையில் அந்த தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதையே நீதிமன்றம் தவறு என்று சொல்லியுள்ளது என்பது விசித்திரமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவர் ஆளுநரா? அல்லது அண்ணாமலையா? என்பதுதான் போட்டி. ஆளுநர் பேசவேண்டியதை அண்ணாமலையும், அண்ணாமலை பேசவேண்டியதை ஆளுநரும் பேசி வருகின்றனர்.

யார் தலைவர் என்று பாஜகவின் மேலிடம்தான் முடிவு செய்யும். கோடநாடு வழக்கில் நாங்கள் யாரையும் சந்தேகப்படவில்லை. ஆனால், உண்மையான குற்றவாளி விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவிற்கு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதில், அரசு கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: விழுப்புரம் பாஜகவில் சலசலப்பு.. தெற்கு மாவட்ட பாஜக தலைவரின் ஆடியோ வைரல்!

Last Updated :Jul 11, 2023, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.