ETV Bharat / state

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

author img

By

Published : Apr 1, 2023, 6:36 AM IST

Updated : Apr 1, 2023, 10:55 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (31). இவர் சென்னை ஐஐடியில் முனைவர் ஆய்வு பட்டம்(PhD) படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான ஐ.ஐ.டியில் பி.எச்.டி. படிக்கும் தேவகிஷ் ஜூஸ் (28),தேவராஜ் (28) ஆகியோருடன் கடந்த மூன்று மாதங்களாக வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 3 பேரும் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றனர். ஆனால் சச்சின் குமார் ஜெயின் பாதியிலேயே வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் என்னை மன்னித்து விடுங்கள், நான் நலமாக இல்லை என ஆங்கிலத்தில் (ஐயம் சாரி,ஐயம் நாட் குட் எனப்) என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். பின்னர் நண்பர்களுக்கும் இதே வாசகத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து தேவகிஷ் ஜூஸ் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது சமையலறை அருகில் உள்ள அறையில் சச்சின் குமார் ஜெயின் சடலமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் ஐ.ஐ.டியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வதால் பெற்றோரை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் காமக்கோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை முடிவு எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை குறித்து உங்களுக்கு எண்ணம் தோன்றினால் உடனடியாக ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம் - 044 24640050 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெறுங்கள்.

இதையும் படிங்க: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் - டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு?

Last Updated :Apr 1, 2023, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.