ETV Bharat / state

ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். - ஓபிஎஸ்

author img

By

Published : Mar 22, 2022, 1:03 PM IST

ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில்  ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம்

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணைக்காக நேற்று (மார்ச்.21) நேரில் ஆஜரானார். இதேபோல, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் விசாரணைக்காக ஆஜரானார்.

இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (மார்ச்.22) இரண்டாவது முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜரானார். சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை  ஆணையத்தில்  ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்ததாகவும், இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும், பொதுவெளியில் எங்கும் பேசவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்
சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்

அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது தமக்கு தெரியாது என ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. எதிர்க்கட்சிகள் அமளி.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.