கடந்த சனிக்கிழமை கட்சி அமைப்புகளிலும், கழக நிர்வாகத்திலும் சில மாற்றங்களை அறிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதன்படி, கழக அமைப்புச் செயலாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக வணிகவரித் துறை அமைச்சர் வீரமணியும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.