ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா: 486 நபர்களுக்கு தொற்று உறுதி!

author img

By

Published : Feb 27, 2021, 10:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 486 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்த கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 52 ஆயிரத்து 464 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 483 நபர்களுக்கும், இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 486 நபர்களுக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 71லட்சத்து 13ஆயிரத்து 15நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 8லட்சத்து 51ஆயிரத்து 63 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறிய முடிந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4ஆயிரத்து 36 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து மேலும் 491 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 2 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகளும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களில் இரண்டாவது அலை தொடங்கிவுள்ளதுபோல தமிழ்நாட்டிலும் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

  • மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
  • சென்னை - 2,35,350
  • கோயம்புத்தூர் - 55713
  • செங்கல்பட்டு - 52719
  • திருவள்ளூர் - 44200
  • சேலம் - 32735
  • காஞ்சிபுரம் - 29,524
  • கடலூர் - 25,154
  • மதுரை - 21,233
  • வேலூர் - 20975
  • திருவண்ணாமலை - 19493
  • திருப்பூர் - 18336
  • தஞ்சாவூர் - 18098
  • தேனி - 17154
  • கன்னியாகுமரி - 17072
  • விருதுநகர் - 16662
  • தூத்துக்குடி - 16353
  • ராணிப்பேட்டை - 16239
  • திருநெல்வேலி - 15728
  • விழுப்புரம் - 15261
  • திருச்சிராப்பள்ளி - 14974
  • ஈரோடு - 14,782
  • புதுக்கோட்டை - 11649
  • நாமக்கல் - 11803
  • திண்டுக்கல் - 11473
  • திருவாரூர் - 11346
  • கள்ளக்குறிச்சி - 10907
  • தென்காசி - 8545
  • நாகப்பட்டினம் - 8599
  • நீலகிரி - 8346
  • கிருஷ்ணகிரி - 8162
  • திருப்பத்தூர் - 7632
  • சிவகங்கை - 6779
  • ராமநாதபுரம் - 6471
  • தருமபுரி - 6652
  • கரூர் - 5502
  • அரியலூர் - 4737
  • பெரம்பலூர் - 2284
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 950
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1043
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.