ETV Bharat / state

பிஎஸ்பிபி விவகாரம்: தாமாக முன்வந்து விசாரித்த தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்!

author img

By

Published : May 25, 2021, 9:49 PM IST

PSBB SCHOOL SEXUAL ALLEGATION CASE, PSBB SCHOOL, பிஎஸ்பிபி பாலியல் விவகாரம், பிஎஸ்பிபி பள்ளி
தாமாக முன்வந்து விசாரித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் புகார் வழக்கில், தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, இது குறித்து காவல்துறை இயக்குநர் மூன்று நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை: கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம், தொடர்பாக உரிய விசாரணை செய்து மூன்று நாள்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதியிடம் தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் இச்சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இதுபோன்ற குற்றங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்த தேசியக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி, கல்லூரிகளில் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை உறுதிப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பாலியல் விவகாரம்: தீப்பொறியான இன்ஸ்டாகிராம் ஷேட்... அப்படி என்னதான் பேசியிருக்கிறார்கள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.