ETV Bharat / state

ராஜேஸ் தாஸை பணியிடை நீக்கம் செய்ய  மாதர் சங்கம் கோரிக்கை

author img

By

Published : Feb 27, 2021, 3:57 PM IST

சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாதர் சங்கத்தினர்
செய்தியாளர்களைச் சந்தித்த மாதர் சங்கத்தினர்

சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு தொந்தரவு செய்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விசாகா கமிட்டியை அமைத்துள்ளது. ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராணி கூறுகையில், “சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகாரளிக்க வந்த பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலரை, உயர் அலுவலர்கள் புகாரளிக்கவிடாமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. பெண் காவல் கண்காணிப்பாளரை மிரட்டிய உயரலுவலர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விசாகா கமிட்டி உரிய முறையில் விசாரணை செய்து, விரைவாக ராஜேஷ் தாஸ் மீதும், அவருக்கு துணைபோன அனைத்து அலுவலர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்கத்தினர்

மேலும் பேசிய அவர், “பெண் ஐபிஸ் அலுவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட டிஜிபி ராஜேஷ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இல்லையென்றால் மாதர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தொடரும்” என்றார்.

இதையும் படிங்க: என்னை குறித்து அவதூறு பரப்பினால்... எச்சரிக்கை விடுத்த பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ராஜேஸ் தாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.