ETV Bharat / state

தோல்வி பயத்தால் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை பாஜக அரசு ஒட்டுக்கேட்கிறது: மு.க.ஸ்டாலின் தாக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:07 PM IST

Updated : Nov 1, 2023, 8:01 PM IST

Etv Bharat
Etv Bharat

Mk stalin: பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதன் வெளிப்பாடாகவே, எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்பது போன்ற செயல்களில் இறங்கியுள்ளதாகவும், இதுகுறித்த மத்திய அமைச்சர்களின் அறிவிப்புகள் கேலி கூத்தாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. இந்த நிலையில், இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியை தழுவ இருக்கிறது என்ற செய்தி நமக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த அச்சத்தின் வெளிபாடுதான் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்பது என தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை எம்எல்ஏ ஆ.கிருஷ்ண்சாமி இல்லத்திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது. இஇதில் கலந்துகொண்டு சிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் இந்த நேரத்தில் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். 'ஜனநாயகம்' பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில் தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பாஜக ஆட்சி தனக்கு எதிராக யார்? எந்த கருத்தைச் சொன்னாலும் அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது; மேலும், எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்கு ஐடி ரெய்டு, அமலாக்கத்துறையை அனுப்பி மிரட்டுவது இன்னும் சொல்லப்போனால், இப்போது புதிதாக தொலைபேசியை உரையாடல்களை ஒட்டு கேட்பது போன்ற முறைகளை இப்போது அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

ஒரு மிகப் பெரிய நிறுவனம் 'ஆப்பிள்' (Apple) என்ற பெரிய நிறுவனம் அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களே நம்மை எச்சரித்துள்ளனர் என்றால், இப்போது இருக்கும் நிலைமையை மக்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும்' என்றார். 'இப்படி ஒரு செய்தி வந்தவுடனே, இதை விசாரிக்கும் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவிப்பை வெளியிடுகிறார் மத்தியமைச்சர் ஒருவர். இதையெல்லாம் பார்க்கும்போது கேலிகூத்தாக உள்ளது. செய்வதையெல்லாம் இவர்கள் செய்துவிட்டு விசாரனை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறுவதுதான் இன்றைக்கு நாம் சந்திக்கும் கொடுமைகள்' என அவர் கூறினார்.

  • Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0

    — Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தோல்வி பயத்தில் பாஜக: 'மத்திய 'பாஜக அரசுக்கு தோல்வி பயம்' வந்துள்ளதால் தான் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை புதிதாக கையில் எடுத்துள்ளது. ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே நமக்கு வருகிறது. இந்தியாவை காக்க 'இந்தியா' கூட்டணிக்கு (INDIA Alliance) நீங்கள் வெற்றியை தரவேண்டும். மோடி ஆட்சியின் கொடுமைகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அவலங்களை மக்களிடத்தில் எடுத்துரைப்பதை தான் நமது இலக்காக வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

மக்களாட்சி நீடிக்குமா? ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? என்ற சூழல் தான் நாட்டில் தற்போது நிலவுகிறது. ஒரு தனியார் செல்போன் நிறுவனமே தானாக முன்வந்து எதிர்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என்று சொல்லும் அளவிற்கு தான் நிலைமை இங்கு இருப்பதாக' அவர் சுட்டிகாட்டினார்.

'ஐபோன் ஹேக்கிங்' என அலார்ட்: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், அக்கட்சியின் மக்கள் தொடர்புத்துறை தலைவர் பவன் கேரா உள்ளிட்டோரின் இது தொடர்பாக தங்களுக்கு வந்த அலார்ட்களையும், இவை குறித்து தங்களது கண்டனங்களையும் தங்களது X வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள பதிவில், "மின்னஞ்சலை அரசு ஹேக்கிங் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை செய்தியும் அதனுடன் மின்னஞ்சலும் எனக்கு வந்துள்ளது" என அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடும் "உங்களின் பரிதாபத்தைக் கண்டு தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது" எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு உத்தரவு: 'மத்திய அரசு ஆதரவுடன்' எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ளிட்ட தலைவர்களின் 'ஐபோன்களை ஹேக்கிங்' செய்ய முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இன்று தான் உண்மையான தமிழ்நாடு நாள்..!" - ராமதாஸ்!

Last Updated :Nov 1, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.