ETV Bharat / state

தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : Jun 30, 2023, 1:53 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் பிறப்பித்து அதை திரும்பப் பெற்ற விவகாரத்தில, தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Ministers Regupathy thangam thennarasu press meet regarding Governor activities
தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. கடந்த ஜூன் 13ஆம் தேதி இவரது வீடு, சகோதர் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அவரை கைது செய்தனர்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை பதவி நீக்கம் செய்திருந்தார். பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களிலேயே மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்ததை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. திமுக அரசு, பிரச்னைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.