தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Published: Mar 18, 2023, 12:41 PM


தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Published: Mar 18, 2023, 12:41 PM
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான Charging station முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதோடு, ஏப்ரல் இறுதிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குளிர்சாதனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மின் தேவை அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கோடை காலத்தில் மின் தேவையை அதிகரித்தாலும் அதனை சமாளிக்க மின் வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், மார்ச் 2022ல் 17,196 மெகாவாட்டாக இருந்த மின் தேவை மார்ச் 2023ல் அதிகபட்சமாக 18,053 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாகவும், ஏப்ரல் மாதம் 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதனை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கான டெண்டர் விரைவில் கோர உள்ளதாக கூறிய அவர், மீட்டர்கள் இலவசமாக நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் என்றும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளதால் மின் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான Charging station முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதோடு, ஏப்ரல் இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திடீர் மழையால் கத்திப்பாரா சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது; சென்னைவாசிகள் அவதி!
