ETV Bharat / state

"விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்" - அமைச்சர் சேகர் பாபு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 10:03 AM IST

Kilambakkam Bus Station
வெகு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு கொடுத்த அப்டேட்

Kilambakkam Bus Station: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு கொடுத்த அப்டேட்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகிறார்கள். இதன் காரணமாக இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சென்னை புறநகர்ப் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கும் வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையம் 2018ஆம் ஆண்டே திறக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், கட்டுமான பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில் இங்கு மழைநீர் தேங்கும் அபாயம் இருந்த நிலையில் அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. மேலும் நவம்பர் மாத இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு துறை அதிகாரிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக இறுதிக் கட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட தேதியில் விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவித்ததாவது, 'மூன்று அணுகு சாலைகளை அமைக்கும் பணி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளைவு அமைக்கும் பணி பேருந்து நிலையத்தில், காவல் நிலையம் அமைக்க வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2013 இல் கிளாம்பாக்கம் பேருந்து முனையும் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், 2019ல் துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டு வந்தது. அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் திட்டமிடப்பட்டிருந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகளை, ஒவ்வொரு பகுதிகளிலும் பயணம் செய்ய இருக்கின்ற பயணிகளுக்குத் தேவைப்படுகின்ற, அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அதிகப்படுத்தி புதிதாக அமைந்த ஆட்சிக்குப் பிறகு தான் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றது. திட்டமிடாமல் துவங்கப்பட்ட பணி என்பதாலே காலதாமதம் ஏற்பட்டது.

போர்க்கால அடிப்படையில் வடிகால் அமைக்கும் பணி இரண்டு இரவுகளில் நடைபெற்று முடிந்தது. ஆம்னி பேருந்துகள் அமைக்கும் பணி விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய நுழைவு வாயில் அமைக்கும் பணி 40 நாட்களில் நிறைவடைந்து திறக்கப்பட உள்ளது.

நவம்பர் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைய ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டபட்டுள்ளது. வெகு விரைவில் முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.7,108 கோடியில் 8 புதிய தொழில் நிறுவனங்கள் துவங்க அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.