ETV Bharat / state

ஆன்மிகத்தை வளர்க்க ஒரு தளம் வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 10:35 PM IST

Updated : Oct 31, 2023, 8:42 AM IST

Etv Bharat
Etv Bharat

Minister PK Sekar Babu: இந்து சமய நெறிகள், பண்பாடுகள் போன்றவற்றை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவதற்கு ஆன்மிகத்திற்கு என ஒரு தளம் வேண்டும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்து சமய நெறிகள், கோட்பாடுகளைப் பரப்புவது, ஆன்மீகத்தை வளர்ப்பது, ஆன்மீகத்தைச் சார்ந்த அனைத்தையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து கொள்ளச் செய்வதற்கு ஆன்மீகத்திற்குண்டான ஒரு தளம் வேண்டும் என்று தெரிவித்தார்.

நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 31 சுருக்கெழுத்துத் தட்டச்சர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (அக்.30) வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறையில் சுமார் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையிலிருந்த பதவி உயர்வு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின்போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள 6 சித்த மருத்துவமனைகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். 15 கோயில்களில் ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திட்ட மதிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும், 100 கோயில்களைக் கணக்கில் எடுத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2024–2025ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றோம். இதில் அடிப்படைத் தேவைகள் என அனைத்தும் அடங்கும் கலாச்சார மையத்தை பொறுத்தளவில் இந்து சமய நெறிகள், கோட்பாடுகளைப் பரப்புவது, ஆன்மீகத்தை வளர்ப்பது, ஆன்மீகத்தைச் சார்ந்த அனைத்தையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து கொள்ளச் செய்வதற்கு ஆன்மீகத்திற்குண்டான ஒரு தளம் வேண்டும். ஆகவே, கலாச்சார மையம் என்பது ஏதோ பொழுதுபோக்கும் மையமல்ல.

அங்கு ஆன்மீக பயிற்சி வகுப்புகள், ஆன்மீக நூலகம், பண்பாடு கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான கண்காட்சி அரங்கம், கலாச்சார பயிற்சிக் கூடங்கள், செயல்திறன் கூடம், பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்றக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. பக்தர்களோடு ஆன்மீக புரட்சிக்கு வித்திடுவதற்காகத் தான் பணத்தைச் செலவு செய்கிறோம். முறையாக துறையினுடைய அனுமதியோடு அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இணை ஆணையர் வாயிலாக ஆணையருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் படி கலாச்சார மையம் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Last Updated :Oct 31, 2023, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.