ETV Bharat / state

தமிழ்நாட்டில் செலுத்திய தடுப்பூசிகள் டோஸ் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது;மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Mar 5, 2022, 7:51 AM IST

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் செலுத்திய தடுப்பூசிகள் டோஸ் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது;
மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் செலுத்திய தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தேனாம்பேட்டையிலுள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று (மார்ச் 04) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த பணி மெகா தடுப்பூசி முகாம்கள், வீடு தேடி தடுப்பூசி செலுத்துதல் என்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 22 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளன. 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. கடந்த மாதம் வரை குஜராத்தில் 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டிலும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். குஜரா‌த், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழ்நாடு இந்த இலக்கை எட்டியிருக்கிறது.

குறிப்பாக முதல் தவணை தடுப்பூசியை 91.54 விழுக்காடு பேர் செலுத்திக் கொண்டனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 4 கோடியே 20 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசி 6 லட்சத்து 37ஆயிரத்து 264 பேர் செலுத்திக் கொண்டனர். தற்போது 92 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன.

அதேபோல் 51.74 லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தற்போது வரை 26 ஆயிரத்து 327 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். 23 கோடியே 73 லட்சத்து 6 ஆயிரத்து 216 ரூபாய் இன்னுயிர் காப்போம் திட்டத்திற்காக அரசு செலவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டாலும், அரசு கூறியதுபோல அனைத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் மக்கள் கடை பிடிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நெல்லிக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.