சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடந்தது.
மாநாட்டில் ஒரு அமர்வுக்கு தமிழ்நாட்டிற்கு பெருமை சேரும் வகையில் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புக்குப் பாராட்டு கிடைத்தது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் குறும்படம் வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை அனைத்து மாநில அமைச்சர்களும் கேட்டுப் பாராட்டினார்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெளி மாநிலங்களில் இருந்து கல்லூரிகளுக்கு வருபவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததும் உடனடியாக கட்டுப்படுத்தப்படுகிறது.
ஐஐடி.யில் 15 விடுதிகளில் படிக்கும் 7300 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், செங்கல்பட்டு தனியார் கல்லூரியில் வெளி மாநில மாணவர்களுக்கு வந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கும் கட்டுப்படுத்தும் பணி நடந்து உள்ளது. தடுப்பூசி எல்லாரும் போட்டு கொண்டால் நல்லது" என்றார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு