மதிய உணவில் வாழைப்பழம்? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதிரடி

author img

By

Published : Jun 28, 2021, 6:41 PM IST

மதிய உணவில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து பரிசீலனை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி: மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் 3,197 பேருக்கு விலையில்லா புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் ஆகியோர் இன்று (ஜூன் 28) வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து வருகிறேன். இது தொடர்பான அறிக்கையினை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்க உள்ளேன்.

அதில், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது, ஆதிதிராவிட பள்ளி, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை உயர்த்துவது, பள்ளிக் கட்டடங்களின் தரம், கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீரை பள்ளி வளாகத்திலேயே வழங்குவது, அதை வகுப்பறைகளுக்கு எடுத்து செல்ல பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவை பரிசீலிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.