ETV Bharat / state

பட்டா நிலங்களில் சடலங்களை புதைக்கலாமா?... கூடாதா? - சென்னை உயர்நீதிமன்றம் தெளிவு!

author img

By

Published : Jul 21, 2023, 7:39 AM IST

சடலங்களை மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அடக்கம் செய்ய வேண்டும், வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

madras high court
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்ததாகவும், புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்தில் புதைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

இதையும் படிங்க: Manipur Video: இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்பி அதிர்ச்சி தகவல்!

அந்த அமர்வில், கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா? புதைக்கக் கூடாதா? என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் முகமது சபீக் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும். நீர்நிலைகளில் இருந்து 90 மீட்டர் தூரத்திற்கு அப்பால் அடக்கம் செய்யலாம்.

இந்த விதிகளுக்கு முரணாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தோண்டி எடுத்து, மயானத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உடல்களை தோண்டி எடுக்க ஆகும் செலவுகளை சட்டவிரோதமாக, உடல்களை புதைத்தவரிடம் இருந்து வசூலிக்கலாம்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் எங்கே உடல்களை அடக்கம் செய்ய எங்கு குறிப்பிடப்பட்டு உள்ளதோ அங்கு மட்டுமே புதைக்க வேண்டும் என விளக்கம் அளித்து உள்ளது. மேலும், வேறு எந்த பகுதியிலும் உடல்களை அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் நீதிமன்றம் தரப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல்…தமிழ்நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.